ஐசிசி கொடுத்ததை விடுங்க.. உ.கோ வென்ற இந்திய அணிக்கு ஜெய் ஷா அறிவித்துள்ள பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Jay-Shah
- Advertisement -

ஐ.சி.சி 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் மாதம் துவக்கத்தில் அமெரிக்காவில் துவங்கி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று முடிந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற வேளையில் இறுதியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது அறிமுகமான போது தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றிருந்த வேளையில் அதற்கு அடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வென்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த கோப்பையை சாம்பியனாக கைப்பற்றியதற்காக இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி அவர்களது சார்பில் 20 கோடியே 42 லட்ச ரூபாயை பரிசுத்தொகையாக அறிவித்திருந்தது.

என்னதான் ஒருபுறம் ஐசிசி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அளித்திருந்தாலும் தற்போது பி.சி.சி.ஐ சார்பில் செயலாளர் ஜெய் ஷா இந்திய அணிக்கு அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. அந்த வகையில் ஜெய்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாவது :

- Advertisement -

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத்தொகையாக வழங்க இருக்கிறோம். இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் திறனை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நன்றி. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒரே போட்டோவை போட்டு இந்திய அளவில் அதிரவைத்த விராட் கோலி – இதுலயும் ஒரு சாதனை இருக்கு

இப்படி 125 கோடி என்கிற மலைக்க வைக்கும் பரிசு தொகையை அறிவித்துள்ள ஜெய் ஷாவின் இந்த அறிவிப்பை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரு தொடரை கைப்பற்றியதற்கு இவ்வளவு பெரிய தொகையா? என்றும் பிரமித்து போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement