இந்தியா என்னையே அழ வெச்சுடுச்சு.. 16வது ஓவரில் இதை செஞ்சேன்.. 2024 டி20 உ.கோ தொடர்நாயகன் பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக இந்தியா சாதனை படைத்தது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 76, சிவம் துபே 27, அக்சர் பட்டேல் 47 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா முழுமூச்சுடன் போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கிளாஸின் 52 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்நாயகன் பும்ரா:
இந்த தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன். ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூக்குகிறது. நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது. இங்கே என்னுடைய குடும்பமும் இருக்கிறது”

- Advertisement -

“கடந்த முறை நெருங்கியும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்று எங்களுடைய வேலை முடிந்துள்ளது. இது போன்ற போட்டியில் உங்களுடைய அணியை வெற்றி கோட்டை தாண்ட வைப்பதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இது போன்ற பெரிய நாட்கள் வரும் போது நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடர் முழுவதுமே நான் தெளிவாக உணர்ந்தேன்”

இதையும் படிங்க: கேள்வியே கேட்காதீங்க.. அவர் பண்ற எல்லாமே மாஸ்டர்க்ளாஸ் தான்.. 4 வருஷம் உழைச்சோம்.. கேப்டன் ரோஹித் பேட்டி

“எப்போதும் நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன். அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திப்பதில்லை. ஆனாலும் அங்கே உங்களை உணர்ச்சிகள் மேலே தூக்கும். இருப்பினும் நீங்கள் போட்டியை முடிந்த பின் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். 16வது ஓவரில் பந்தில் கொஞ்சம் கசடு இருந்தது போல் தெரிந்தது. அதை என்னால் ரிவர்ஸ் செய்ய முடியும். அதை செய்யும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார்

Advertisement