9 பந்துகளில் 5 விக்கெட் ! அனலாய் தெறித்த ஜஸ்ப்ரித் பும்ரா, புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

Jasprith Bumrah vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 9-ஆம் தேதி நடைபெற்ற 56-வது லீக் போட்டியில் மும்பையை தோற்கடித்த கொல்கத்தா 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 7 தோல்விகளை பதிவு செய்துவிட்ட அந்த அணி 5-வது வெற்றியை பதிவு செய்ததால் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியதுடன் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் போராடி 165/9 ரன்கள் சேர்த்தது.

Rohit Sharma vs KKR Shreyas Iyer

- Advertisement -

அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக 43 (24) ரன்களும் அஜிங்கிய ரஹானே 25 (24) ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா தனது பங்கிற்கு அதிரடியாக 43 (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 (8) ஆண்ட்ரே ரசல் 9 (5) போன்ற முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினாலும் இறுதியில் ரின்கு சிங் அதிரடியாக 23* (19) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்.

மும்பை பரிதாபம்:
அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (6) திலக் வர்மா 6 (5) ரமந்தீப் சிங் டிம் டேவிட் 13 (9) என அந்த அணியின் முக்கியமான வீரர்கள் கணிசமான ரன்களைக் கூட எடுக்காமல் கொல்கத்தாவின் அபார பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த சமயத்தில் போராட்டமாக 51 (43) ரன்கள் எடுத்த இஷான் கிஷனும் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட்டும் 15 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால் 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டான மும்பை மோசமான தோல்வியை சந்தித்தது.

ROhit Sharma MI vs KKR

கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் அன்ரே ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். மறுபுறம் ஏற்கனவே வரலாற்றில் முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணியாக பரிதாப சாதனையுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்து மீண்டும் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

மிரட்டல் பும்ரா:
இதனால் புள்ளி பட்டியலில் வலுவாக கடைசி இடத்தை பிடித்துள்ள அந்த அணிக்கு நேற்றைய போட்டியில் அதன் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தலான பவுலிங் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 136/3 என்ற ஓரளவு நல்ல நிலையில் இருந்த போது 15-வது ஓவரை வீசிய பும்ரா 2-வது பந்தில் காட்டடி வீரர் ஆண்ட்ரே ரசலை வெறும் 9 (5) ரன்களில் காலி செய்து 5-வது பந்தில் 43 (26) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த நிதிஷ் ராணாவையும் அவுட் செய்தார்.

MI Jaspirt Bumrah

அதோடு நிற்காத அவர் 17-வது ஓவரின் முதல் பந்தில் ஷெல்டன் ஜேக்சன் 5 (7) 3-வது பந்தில் பட் கமின்ஸ் 0 (2) 4-வது பந்தில் சுனில் நரேன் 0 (1) என 3 விக்கெட்டுகளை எடுத்து மெய்டன் ஓவராக வீசி மிரட்டினார். மொத்தமாக 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை 2.50 என்ற அபார எக்கனாமியில் எடுத்ததால் 180 ரன்கள் எடுக்க வேண்டிய கொல்கத்தா 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இந்த வருடம் முதல் 10 போட்டிகளில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அவர் நேற்றைய போட்டியில் வெறும் 9 பந்து இடைவெளியில் 5 விக்கெட்டுகளை சாய்த்து விஸ்வரூபம் எடுத்தார்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
அவரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோன ஐபிஎல் நிர்வாகம் நேற்று மும்பை தோற்றாலும் கூட ஆட்டநாயகன் விருதை அவரின் திறமைக்கு சமர்ப்பித்தது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் மும்பை தோல்வியடைந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

1. மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய வரலாற்று சாதனையை அவர் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜஸ்பிரித் பும்ரா : 5/10, கொல்கத்தாவுக்கு எதிராக, 2022*
2. இஷான் சர்மா : 5/12, டெக்கான் சார்ஜர்ஸ்க்கு எதிராக, 2011

- Advertisement -

2. ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த 2-வது இந்திய பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அந்தப் பட்டியல் இதோ:
1. அனில் கும்ப்ளே : 5/5, ராஜஸ்தானுக்கு எதிராக, 2009.
2. ஜஸ்பிரித் பும்ரா : 5/10, கொல்கத்தாவுக்கு எதிராக, 2022*

3. ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்தார். முந்தைய சாதனை : யுஸ்வென்ற சஹால் – 5/40, 2022

4. ஐபிஎல் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த போட்டிகளில் 2-வது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற பெருமையும் பெற்றார். முதலிடத்தில் ஆடம் சாம்பா உள்ளார் (6/29 – ஹைதெராபாத்துக்கு எதிராக, 2019)

Advertisement