என் வழியும் தோனி வழி தான்.. துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசும் ரகசியம்.. பற்றியும் பும்ரா பேட்டி

Jasprit Bumrah
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்காவில் துவங்குகிறது. இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா முழுமூச்சுடன் விளையாட தயாராகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பையை காயத்தால் தவற விட்ட அவர் இம்முறை 2024 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

முன்னதாக 2022 ஜூன் மாதம் இங்கிலாந்து தொடரில் காயத்தை சந்தித்த பும்ரா 2022 ஆசிய, டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் விளையாடவில்லை. அப்போது பும்ரா பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் ஆனால் நாட்டுக்காக காயமடைந்து வெளியேறி விடுவார் என்ற விமர்சனங்கள் இருந்தன.

- Advertisement -

தோனியின் வழி:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் காயத்திலிருந்து குணமடைந்து 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு உதவினார். அப்போதிலிருந்து பழைய ஃபார்முக்கு வந்துள்ள அவர் மீண்டும் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வருகிறார். இந்நிலையில் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் கவனம் செலுத்தி கம்பேக் கொடுத்ததாக பும்ரா கூறியுள்ளார்.

தோனியின் அந்த தாரக மந்திரத்தையே தாமும் பின்பற்றுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “காயத்திலிருந்து கம்பேக் கொடுத்ததிலிருந்து நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி முடிந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் விளையாட முயற்சிக்கிறேன். ஏனெனில் சில அம்சங்கள் எனது வழியில் செல்லும். சில அம்சங்கள் செல்லாது”

- Advertisement -

“இவை செயல்முறையின் ஒரு அங்கமாகும். எனவே நான் இந்த விளையாட்டை புரிந்துக்கொள்ள துவங்கியுள்ளேன். ஏனெனில் இந்த விளையாட்டை நான் விரும்புகிறேன். மேலும் இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் நான் செயல்முறையில் கவனம் செலுத்துகிறேன். அந்த வகையில் நீங்கள் உங்களுடைய அழுத்தத்தை குறைத்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாட முடியும். வளரும் போது நான் டென்னிஸ் மற்றும் ரப்பர் பந்துகளில் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்”

இதையும் படிங்க: ஐபிஎல் வேற இந்தியா வேற.. கம்பீர் பயிற்சியாளரா வரது பெருசில்ல.. அவங்களிடம் திணிக்காதிங்க.. கங்குலி கருத்து

“சிறுவனாக இருக்கும் போது விக்கெட்டுகளை எடுக்க இதுவே (யார்க்கர்) ஒரே வழி என்று நான் நினைப்பேன். ஏனெனில் தொலைக்காட்சிகளில் பார்த்து ஆர்வமடைந்த நான் வேகபந்து வீச்சின் ரசிகன். தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசுவதன் ரகசியம் டென்னிஸ் பந்துகளில் அதிகமாக விளையாடியதாலா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்வது நிச்சயம். இப்போதும் அதை நான் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். எனவே

Advertisement