ரோஹித்தும் இல்ல.. பாண்டியாவும் இல்ல.. மும்பை அணிக்கு புதிய கேப்டனாகப்போகும் வீரர்? – டிவிஸ்ட் நடக்கவும் வாய்ப்பிருக்கு

Pandya-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்கள் அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சில முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது.

அதோடு இந்த ஏலத்திற்கு முன்பாகவே டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியாவை பெரிய தொகைக்கு மும்பை அணி ட்ரேடிங் செய்தது மட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாகவும் நியமித்திருந்தது.

- Advertisement -

இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த வேளையில் மும்பை அணிக்கு எதிராக ரசிகர்களும் தங்களது குரல்களை எழுப்பி வந்தனர். இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர் அதன்பிறகு தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரிலும் இடம்பெறாத அவர் எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாண்டியா ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்பட போகிறார்கள்? என்கிற கேள்வியும் அதிகளவு எழுந்து வருகிறது. ஏனெனில் ஒருவேளை ஹார்டிக் பாண்டியாவால் இந்த சீசனில் விளையாட முடியாமல் போனால் நிச்சயம் புதிய கேப்டனை தான் மும்பை அணி நியமிக்கும். அந்த வகையில் அந்த பதவிக்கு இரண்டு பேர் இடையே போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க : எனக்கு பிடிக்காத இடத்தில் விளையாடும்.. அவருக்கு தொடர்ந்து சான்ஸ் கொடுப்போம்.. ரோஹித் சர்மா ஆதரவு

ஒருவர் சூரியகுமார் யாதவ் மற்றொருவர் பும்ரா இவர்கள் இருவரில் பும்ராவிற்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பும்ரா ஏற்கனவே அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதோடு மட்டுமின்றி டெஸ்ட் அணியிலும் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரே மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement