- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னை விட அவர் 1000 மடங்கு சிறந்த பிளேயர்.. இப்போ உள்ள இந்திய பசங்க வேற லெவல்.. கபில் தேவ் பாராட்டு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் அசத்தி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. முன்னதாக இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா எதிர்பார்ப்புகளை விட மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய அவர் மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் ஜாம்பவான் கபில் தேவ் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் சமீப காலங்களாகவே காயத்தால் இந்தியாவுக்காக முழுமையாக விளையாடவில்லை. அதனால் இவர் பணத்துக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் இத்தொடரில் முதல் 6 போட்டிகளில் 116 ரன்கள் குவித்த அவர் 8 விக்கெட்டுகளையும் எடுத்து தன்னுடைய தரத்தை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

கபில் தேவ் பாராட்டு:
அதே போல காயத்தால் கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடாத ஜஸ்ப்ரித் பும்ராவும் ஒரு கட்டத்தில் பணத்துக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் என்ற விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் காயத்திலிருந்து குணமடைந்த பின் சக்கை போடு போட்டு வரும் அவரும் இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு துல்லியமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருடைய தனித்துவமான பவுலிங் ஆக்சனை கணிக்க முடியாமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தம்மை விட 1000 சிறந்தவர் என்று ஜாம்பவான் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட தற்போதைய இந்திய வீரர்கள் மிகவும் ஃபிட்டாக அற்புதமாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி பிடிஐ இணையத்தில் அவர் பேசியது. “பும்ரா 1000 மடங்கு என்னை விட சிறந்தவர். இந்த இளம் வீரர்கள் அந்த காலத்தில் இருந்த எங்களை விட பன்மடங்கு நன்றாக செயல்படுகின்றனர். நாங்கள் அதிக அனுபவத்தை கொண்டுள்ளோம். இருப்பினும் இந்த வீரர்கள் சிறந்தவர்கள்”

இதையும் படிங்க: ஒருவரை மட்டும் நம்பினால் வேலைக்காகாது.. ஜெயிக்கனும்னா இதை பண்ணுங்க.. இந்திய அணிக்கு – கபில் தேவ் அட்வைஸ்

“இப்போதுள்ள வீரர்கள் அற்புதமானவர்கள். ஃபிட்டாக உள்ளனர். அதிகமாக கடினமாக உழைக்கின்றனர்” என்று கூறினார். இருப்பினும் எத்தனை வீரர்கள் இருந்தாலும் 1983 உலகல் கோப்பையை கேப்டனாக வென்று இந்திய கிரிக்கெட் எனும் ஆலமரத்திற்கு ஆழமாக விதை போட்ட கபில் தேவ் எப்போதும் மகத்தான வீரராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது.

- Advertisement -