4.17 எக்கனாமி.. சுனில் நரேனின் 10 வருட சாதனையை உடைத்த பும்ரா.. வேறு பவுலர்கள் செய்யாத புதிய உலக சாதனை

Jasprit Bumrah 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றதால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் இந்த வருடம் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா மாபெரும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக அனைத்து விதமான ஐசிசி தொடர்களிலும் சந்தித்து வந்த அவமான தோல்விகளையும் இந்தியா உடைத்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு அபாரமாக பந்து வீசிய அவர் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

பும்ராவின் சாதனை:
அதே வேகத்தில் மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி 30 பந்துகளில் தென்னாப்பிரிக்காவுக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது 16, 18வது ஓவரை வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் இந்த தொடர் முழுவதும் அசத்திய அவர் மொத்தம் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்தார்.

இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் மிகவும் குறைந்த எக்னாமியை பதிவு செய்த வீரர் என்ற சுனில் நரேனின் 10 வருட சாதனையை உடைத்த ஜஸ்ப்ரித் பும்ரா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2014 டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சுனில் நரேன் 4.60 எக்கனாமியை பதிவு செய்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அப்படி தொடர் முழுவதும் அசத்திய அவர் 2024 டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்நாயகன் விருதை வென்ற முதல் பந்து வீச்சாளர் என்ற வேறு பவுலர்களும் செய்யாத மாபெரும் உலக சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் சாகித் அப்ரிடி, தில்சான், கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், விராட் கோலி (2 முறை), டேவிட் வார்னர், சாம் கரண் ஆகியோரும் டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதுகள் வென்றுள்ளனர்.

இதையும் படிங்க: வெ.இ, இங்கிலாந்து போன்ற அணிகள் செய்யாத உலக சாதனையை நிகழ்த்திய இந்தியா.. 3 உலக சாதனையும் சமன்

அதில் தில்சான், விராட் கோலி, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் பேட்ஸ்மேன்கள். அப்ரிடி, ஷேன் வாட்சன், சாம் கரண் ஆகியோர் ஆல் ரவுண்டர்கள். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா தான் முதல் முறையாக ஒரு பவுலராக தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ள பும்ரா தன்னை சாம்பியன் பவுலர் என்பதை நிரூபித்துள்ளார்.

Advertisement