ரோஹித் ஷர்மா சாதாரண ஆள் இல்ல வேற லெவல்..! புகழ்ந்து தள்ளும் இங்கிலாந்து வீரர்..!

sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெற்றிபெற்றது. நேற்று(ஜூலை 8) ) இங்கிலாந்தில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
sharma
இந்திய அணி சார்பில் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 56 பந்துகளில் 100 ரன்களை எடுத்திருந்தார். மேலும், இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்ற ரோஹித் ஷர்மா தொடர் நாயகன் விருதையும் பெற்றார். ஹிட் மேன் ரோஹித் ஷர்மாவிற்கு பாராட்டுக்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரோஹித் ஷர்மாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த போட்டி முடிந்து பேசிய ரோஹித் ஷர்மா “இது தான் என்னுடைய ஆதாயம். நான் நிதானமாக விளையாட முடிவெடுத்தேன். களத்தில் சிறிது காலம் நிலைத்துவிட்டால் பின்னர் அடித்து ஆடலாம் என்பது எனக்கு தெரியும் . மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடுவது என்பது முக்கியம் அதனால் நான் நிலைத்து ஆடினால் போட்டி சுலபமாக முடியும் என்று நினைத்தேன். இதை தான் பாண்டியா பல ஆண்டுகளாக செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
ANDERSON
இந்நிலையில் சமீபத்தில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில் ‘இங்கிலாந்து அணி சிறப்பாகவே பந்து வீசியது. ஆனால், இந்திய அணியின் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக விளையாடினார். அவர் ஒரு சிறந்த வீரர், மொத்த பெருமையும் ரோஹித் ஷர்மாவிற்கு தான் சேரும். அவருடைய திறமைக்கு தலை வணங்குகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement