Shreyas Iyer : இவர் பயமின்றி ஆடியதால் நான் எளிதாக வெற்றி பெற்றோம் – ஷ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.

Iyer

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : சொந்த மைதானத்தில் மூன்று தோல்விகளுக்கு பிறகு தற்போது ஒரு வெற்றி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தவான் அதிரடியாக ஆடி சிறப்பான துவக்கத்தை அளித்தார். அவர் அதிரடியாக ஆடியதால் பின்னால் வருபவர்களுக்கு எளிதாக ரன்களை அடிக்க அவரது ஆட்டம் வழிசெய்தது. மேலும், இந்த தொடர் முழுவதும் அவர் அவ்வாறே விளையாடிவருகிறார். அவர் இப்படி விளையாடும்போது வெற்றி எங்களுக்கு எளிதாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Dhawan

மேலும், சந்தீப் சிறப்பாக பந்துவீசுகிறார். அவர் அதிக அளவில் ரன்களை இந்த போட்டியில் விட்டு கொடுத்து இருந்தாலும் அவர் மீண்டு முயற்சி செய்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமித் மிஸ்ரா அவருக்கு உறுதுணையாக எப்போதும் இருந்துவருகிறார். தவான் துவக்கத்தில் பயமின்றி ஆடுவதால் இனிவரும் போட்டிகளில் நாங்கள் தொடர்ச்சியான வெற்றிகளை குவிப்போம் என்று கூறினார் ஷ்ரேயஸ் ஐயர்.

Advertisement