என் கோபத்தை தூண்டிய விஷயம் இதுதான்..! கே.எல்.ராகுல் அதிரடி..! – எதற்கு தெரியுமா..?

Advertisement

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 தொடர் தொடங்கிய நிலையில் , முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பங்குபெறுள்ள ராகுல் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த நாட்கள் எரிச்சலை தந்தது என்று தெரிவித்துள்ளார்.
rahul
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வந்த கே எல் ராகுல்,அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்தார் . நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் ஆடிய இவர் 659 ரன்களை குவித்துள்ளார், அதில் 6 அரை சதமும் அடங்கும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது இங்கிலாந்து தொடரில் பங்கேற்று விளையாடிவரும் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்களை குவித்தார்.அதில் 10 பவுண்டரி ,மற்றும் 5 சிக்ஸ்களும் அடங்கும்.இதுவரை இந்திய அணியில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 671 ரன்களை குவித்துள்ளார். அதில் இவரது சராசரி 55.92 ஆகும். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக சதத்தை அடித்த ராகுல் கூறியதாவது

“இந்திய அணியில் வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும்போது தான், வருகிற ஒவ்வொரு வாய்ப்பும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. அணியில் இடம்பெறாமல் இருந்த காலம் எனக்கு எரிச்சலை தந்தது. அதனால் வாய்ப்பு கிடைத்தால் அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு இங்கிலாந்தில், முதல் டி20 போட்டியிலேயே கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து அனைத்துப் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement