அணியில் மூத்தவீரர் என்கிற மரியாதை எனக்கு கிடைப்பதில்லை – முன்னணி வீரர்

Ishanth
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Shami 1

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் ஜாலியாக கலந்துரையாடினார். இந்த ஆண்டில் மட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து உள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இசாந்த் சர்மா பேசுகையில் : என்னை மூத்தவராக பாவித்து யாரும் நடந்து கொள்வதில்லை. எங்களுக்குள் ஜூனியர் சீனியர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. மேலும் ஒவ்வொருவரின் வெற்றியையும் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது இந்த போட்டியினால் எங்களது திறன் மேம்படுகிறது என்று ஜாலியாக இஷாந்த் சர்மா. ஒருநாள் மேலும் மூத்த வீரராக என்னை அவர்கள் மதிப்பதே இல்லை அந்தளவுக்கு எங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாகவும் ஜாலியாக கிண்டல் செய்தார்.

ind

நாங்கள் தொடர்ந்து வேகமாக பந்து வீசுவதால் அவ்வப்போது சோர்வு ஏற்படும் அப்போதெல்லாம் எங்களுக்கு நாங்களே கிண்டல் செய்து உற்சாகமடைந்து கொள்வோம். மேலும் ஷமி கூறும்போது இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய முன்னணி வீரர்களுடன் பந்து வீசும் போது எனக்கு அந்த சுமை குறைகிறது. அவர்களின் பந்துவீச்சை பார்க்கும் போது எனக்குள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது என்று ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement