என் கடைசி மூச்சு இருக்கும் வரை சூரியகுமார் யாதவின் இந்த செயலை மறக்கமாட்டேன் – இர்பான் பதான் புகழாரம்

Irfan
- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு இரண்டாவது முறையாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகையை பிசிசியின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியின் கடைசி ஓவரின் போது டேவிட் மில்லர் அடித்த கேட்சை லாபகமாக பிடித்த சூரியகுமார் யாதவ் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.

நம்ப முடியாத கேட்சை பிடித்த அவரை பலரும் பாராட்டி உள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என் கடைசி மூச்சு உள்ளவரை சூரியகுமார் யாதவையும் அவர் பிடித்த இந்த கேட்சையும் நான் மறக்க மாட்டேன்.

- Advertisement -

இந்த கண்ணீர் நான் இப்போது சோகமாக இருப்பதாலோ அல்லது வாழ்க்கையில் நடந்த விஷயங்களாலோ வந்தவை அல்ல. இவை அனைத்தும் இந்திய அணி வெற்றி பெற்றதால் வந்த மகிழ்ச்சியான கண்ணீர் துளிகள் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மனுஷன் அழுதுட்டாரு.. அக்தர் முதல் அப்ரிடி வரை.. வரலாறு படைத்த இந்திய அணியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரரகள்

இந்த இறுதி போட்டியின் போது கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்கிற நிலையில் அதிரடி வீரரான டேவிட் மில்லர் களத்தில் இருந்ததால் போட்டி இருபுறமும் சமமாகவே இருந்தது. ஆனால் முதல் பந்திலேயே டேவிட் மில்லர் அடித்த அந்த கேட்சை அசாத்தியமான வகையில் பிடித்த சூரியகுமார் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement