- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவில் ரோஹித் – பாண்டியா பிரச்சனையை விட மோசம்.. பாகிஸ்தானின் தோல்வி பற்றி இர்பான் பதான்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் சொதப்பிய பாகிஸ்தான் அவமான தோல்வியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவிடம் 120 ரன்களை துரத்த முடியாமல் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே வெளியேறியது.

அந்த அணியின் இந்த தோல்விக்கு அனைத்து வீரர்களும் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. இது போக அந்த அணிக்குள் அனைத்து வீரர்களும் ஒற்றுமையுடன் விளையாடாததும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பாபர் அசாமை தொலைக்காட்சியில் இமாத் வாசிம், முகமது அமீர் ஆகியோர் விமர்சித்ததாக இர்ஃபான் அத்தான் கூறியுள்ளார்.

- Advertisement -

மோசமான நிலை:
ஆனால் தற்போது ஓய்விலிருந்து மீண்டும் வந்த அவர்கள் இந்த உலகக் கோப்பையில் பாபர் தலைமையிலேயே சுமராக விளையாடியதாக இர்பான் பத்தான் தெரிவித்துள்ளார். அதே போல கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்ட போது அதை ஷாஹீன் அப்ரிடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திறமையை தாண்டி பல குளறுபடிகள் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்திய கிரிக்கெட்டிலும் சில மோசமான தருணங்கள் இருந்தது. ஆனால் பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமே இல்லை. எடுத்துக்காட்டாக இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை கேப்டனாக நியமித்தது. அது மும்பை அணியில் பல எதிர்மறையான விஷயங்களை ஏற்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்தது”

- Advertisement -

“ஆனால் இந்திய அணி என்று வந்ததும் ரோகித் தலைமையில் ஹர்திக் பாண்டியா நன்றாக செயல்படுகிறார். ரோஹித் சர்மாவும் அவரை நன்றாக பயன்படுத்துகிறார். அவர்கள் சமீபத்திய விஷயங்கள் எதையும் இந்திய அணியை பாதிக்க விடவில்லை. ஆனால் பாகிஸ்தானில் அது நடைபெறவில்லை. அங்கே என்ன நடக்கிறது? முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோர் சமீபத்தில் தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு தங்களுடைய கேப்டனை பற்றி மோசமாக பேசினார்கள்”

இதையும் படிங்க: பாகிஸ்தான், இலங்கையை முடிச்சு.. இந்தியாவின் போட்டியும் காலி பண்ணிட்டீங்க.. ஐசிசி’யை விளாசிய கவாஸ்கர்

“ஷாஹீன் அப்ரிடி கேப்டனாக இருந்தார். அவரை நீக்கிய பாகிஸ்தான் மீண்டும் பாபர் அசாமிடம் சென்றது. அதனால் ஷாஹீன் என்னால் துணை கேப்டனாக இருக்க முடியாது என்று சொல்லி விட்டார். எனவே திறமையை தவிர்த்து இதுதான் பாகிஸ்தானின் முதன்மை பிரச்சனையாகும். அங்கே களத்திலும் களத்திற்கு வெளியே நிறைய டிராமா இருக்கிறது. அதுவே பாகிஸ்தானை இந்த பாதாளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -