ஒத்திவைக்கப்படும் ஐபிஎல் தொடர். பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ தகவல் – நாளை மறுநாள் புதிய அறிவிப்பு

Ipl cup
- Advertisement -

13வது ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் 29ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவையும் தாக்கியுள்ளது.

corona

- Advertisement -

மொத்தம் 97 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்ட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்க்க மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என பலர் பல்வேறு நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் ஐபிஎல் தொடரை எவ்வாறு நடத்துவது என பிசிசிஐ விழிபிதுங்கி யோசித்து வருகிறது.இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடற் தள்ளிவைப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது : ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இது வரை தொடர் நடப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. முன்னதாக கங்குலி கண்டிப்பாக ஐபிஎல் தொடர் நடைபெறும் எனக் கூறியிருந்தார். சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

- Advertisement -

மேலும், பிசிசிஐ தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொன்ன தேதியில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து நாளை மறுநாள் மார்ச் 14ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

bcci

எனவே இன்னும் இரண்டு நாட்களில் ஐ.பி.எல் தொடர் நடக்குமா ? நடக்காதா ? என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் அந்த அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement