ஐபிஎல் பரிசுத்தொகை குறைப்பு. யாரை கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க ? – அணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல் போட்டிகள் ரசிகர்களின் பேராதரவோடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடர் மார்ச் 29ம் தேதி முதல் ஐபிஎல் தொடருக்கான 13 வது சீசன் துவங்க உள்ளது.

ipl

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் மொத்த பரிசு தொகை 50 கோடியாக கொடுக்கப்படும். முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு இது பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்தப் பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைந்துள்ளது. முன்னதாக வெற்றி பெறும் அணிக்கு 25 கோடியாகவும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ஆகவும் இருந்தது.

இந்த பரிசுத்தொகை குறைக்கப்பட்டு வெற்றி பெறும் அணிக்கு 12 கோடியாகவும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 6.3 கோடி ஆகும் மாற்றப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணிகளுக்கும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ipl

இதனை தவிர்த்துவிட்டு பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தலா 50 லட்சம் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இது முன்பு இருந்ததில் இருந்து 20 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோடிகளில் லாபம் புரளும் மிகப்பெரிய தொடராக ஐ.பி.எல் உலக அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பரிசுத்தொகை குறைப்பு காரணமாக கடும் அதிர்ச்சியடைந்த ஐபிஎல் உரிமையாளர்கள் எங்களிடம் ஆலோசனை செய்யாமல் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து விரைவில் நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவினை அறிவிப்போம் என்று கூறியுள்ளனர்.

Advertisement