ஐபிஎல் 2022 : முதல் போட்டி சிஎஸ்கே – கேகேஆர் மோதல், அதிகாரபூர்வமாக வெளியான முழு – அட்டவணை இதோ

CSKvsKKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2018க்கு பின் முதல் முறையாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடந்தது. பெங்களூருவில் 2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தின் முடிவில் 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் 10 அணிகளுக்காக வாங்கப்பட்டார்கள்.

ipl

- Advertisement -

இதை அடுத்து இந்த வருடம் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. அதில் முதல் கட்டமாக இந்த வருடத்தின் அனைத்து போட்டிகளும் வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஐபிஎல் 2022 திருவிழா:
இதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரில் இருக்கும் 4 முக்கிய மைதானங்களிலும் பைனல் உள்ளிட்ட வெற்றியாளரை தீர்மானிக்கும் பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி அன்று மும்பையில் துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின்னர் மே29 ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுவதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்திருந்தது. அத்துடன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதும் என அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.

IPL
IPL Cup

மேலும் இம்முறை 10 அணிகள் 74 போட்டிகளில் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக அனைத்து 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வாங்கியது மற்றும் எத்தனை இறுதிப் போட்டிகளில் விளையாடியது என்பதன் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் பிரிக்கப்பட்டன.

- Advertisement -

அதன்படி குரூப் ஏ பிரிவில் இருக்கும் ஒரு அணி அதே பிரிவில் இருக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். மேலும் குரூப் பி பிரிவில் தமக்கு நேரெதிர் உள்ள அணியுடன் 2 போட்டிகளில் மோத வேண்டும். அத்துடன் குரூப் பி பிரிவில் இருக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா 1 போட்டிகளில் மோத வேண்டும். இதன்படி ஒரு அணி இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

IPL 2022 Schedule

முழு அட்டவணை:
அந்த வகையில் குரூப் பி பிரிவில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக இடம்பிடிக்க அதனுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல், லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் ஆகிய அணிகள் இடம் பிடித்தன. அதேபோல் குரூப் பி பிரிவில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக இடம் பிடிக்க அதனுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் கொண்ட முழு அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

IPL 2022 Schedule

இரட்டை போட்டிகள் – பிளே ஆப் சுற்று:
2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள்
வரும் மே மாதம் 22ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. அதே போல் இந்த வருடம் 12 நாட்களில் ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது.

- Advertisement -

வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் துவங்கும் இந்த போட்டிகள் அனைத்தும் மதியம் 3.30 மணிக்கு சனி, ஞாயிறு எனப்படும் வார இறுதி நாட்களில் நடைபெற உள்ளது. அதே போல எஞ்சிய இரவு நேர போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளன. மும்பை வான்கடே மற்றும் டிஒய் பாட்டில் ஆகிய மைதானங்களில் தலா 20 போட்டிகளும் ப்ராபோர்ன் மற்றும் எம்சிஏ ஆகிய மைதானங்களில் தலா 15 போட்டிகளும் நடைபெற உள்ளன. 

இதையும் படிங்க : தலையனை, குளியல் துண்டில் இருந்த இரத்தக்கறை. 20 நிமிட போராட்டத்தில் வார்னேவுக்கு – நடந்தது என்ன?

இருப்பினும் இந்த பிளே ஆப் சுற்று போட்டிகள் எங்கே நடைபெற உள்ளது மற்றும் அதன் தேதிகள் இன்னும் வெளியாகவில்லை. வரும் மே 29ஆம் தேதியுடன் நிறைவுபெறும் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் பெரும்பாலும் அகமதாபாத் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement