உலகத்துக்கே சொல்லிக்கொடுத்த எங்களுக்கு நீங்க சொல்லாதீங்க.. அப்டின்னா ஒத்துக்கிட்டீங்களா? ரோஹித்துக்கு இன்சமாம் பதிலடி

Inzamam-ul-haq 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை ஜூன் 27ஆம் தேதி சந்திக்கிறது. மறுபுறம் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அதிலும் கத்துக் குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவரில் தோற்ற பாகிஸ்தான் அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தினாரா என்பதை நடுவர்கள் கண்காணிக்கவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விமர்சித்தார். ஏனெனில் புதிய பந்தை போலவே 15வது ஓவரில் பழைய பந்தை அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாக இன்சமாம் கூறியிருந்தார். எனவே ஆஸ்திரேலியா போட்டிக்கு முன் இந்தியா பந்தில் ஏதோ செய்ததாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

இன்சமாம் பதிலடி:
அதற்கு சூரியனுக்கு கீழே பிட்ச் காய்ந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங்காகும் என்று அவருக்கு ரோஹித் சர்மா பதிலடி கொடுத்திருந்தார். மேலும் நாங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் விளையாடவில்லை என்று தெரிவித்திருந்த ரோகித் சர்மா அனைத்து அணிகளுக்குமே ரிவர்ஸ் ஸ்விங் கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனவே இந்த அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் மூளையை பயன்படுத்துங்கள் என்றும் அவருக்கு ரோஹித் சர்மா நெத்தியடி பதிலை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி பாகிஸ்தானி டிவி எனும் தொலைக்காட்சியில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “நாங்கள் தான் உங்களுடைய மூளையை திறக்க வேண்டும்”

- Advertisement -

“முதல் விஷயம் அது (ரிவர்ஸ் ஸ்விங்) நடந்ததாக ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டார். எனவே நான் அதை சரியாக கவனித்தது உறுதியாகியுள்ளது. இரண்டாவதாக சூரியனுக்கு கீழே பிட்ச்சில் எப்படி பந்து ரிவர்ஸ் ஆகிறது என்பதை ரோகித் சர்மா எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகிற்கு அதைச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இது போன்றவற்றை பேசுவது சரியல்ல என்று ரோஹித்திடம் சொல்லுங்கள்.

இதையும் படிங்க: கேன் வில்லியம்சனுக்கு அடுத்து இந்த சாதனையை செய்த 2 ஆவது கேப்டன் ரோஹித் சர்மா தானாம் – விவரம் இதோ

“அவரிடம் செய்தியாளர் தவறான கேள்வியை கேட்டுள்ளார். உண்மையில் நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் பரிந்துரைத்தேன். ஏனெனில் பந்து 15வது ஓவரிலும் ரிவர்ஸ் ஸ்விங்கானது. இப்போதும் நடுவர்கள் கண்ணையும் மனதையும் திறந்து வைத்து இந்திய பவுலர்களை கண்காணிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனை. ரோகித் சர்மா மூளையைப் பற்றி பேசினார். நான் கண்கள் மற்றும் மனதை திறந்து பார்க்குமாறு மட்டுமே சொன்னேன்” என்று கூறினார்.

Advertisement