இந்திய அணி வரும் ஜூலை 3 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது இந்திய அணியல் இருந்து பும்ரா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஜூலை 3 ஆம் தேதி மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது இந்திய அணி. அதனை தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. இந்நிலையில் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் முதன் போட்டியின் போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அனுப்பபட்டர். தற்போது அவருக்கு பதிலாக க்ருனல் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல ஐயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேக பந்து வீச்சாளர் பும்ராவிற்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்காலிக ஒய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் விளையாடி வந்த தீபக் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால். ஒரு நாள் போட்டிக்குள் பும்ராவிற்கு காயம் சரி ஆகிவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதனால் அவர் ஒரு நாள் பங்கேற்பார் என்று கருதப்படுகிறது.