ஐபிஎல் போட்டிக்கு முன் லூட்டி…கலக்கும் கோலி,ரெய்னா மற்றும் தவான் – வீடியோ

dhawan

இலங்கை முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அடுத்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.இந்நிலையில் இலங்கை தொடரை முடித்துவிட்டு வந்த கையோடு வீரர்கள் பலரும் ஐபிஎல்-இல் சிறப்பாக ஆடுவதற்காக பயிற்சி எடுத்துவருகின்றனர். இப்போதிலிருந்தே பல வீரர்களும் போட்டிக்காக தயாராகிவரும் அதே வேளையில் இலங்கையிலிருந்து திரும்பிய கையோடு ரெய்னாவும் தவானும் இலங்கை தொடரில் ஓய்விலிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை சந்தித்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.

rahulkl

அப்போது அவர்கள் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிய அந்த படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.ஐபிஎல்-இல் விராட்கோலி பெங்களூரு அணிக்காகவும், ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், தவான் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

suresh-raina

மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Advertisement