மகளிர் ஐபிஎல் எஸ், ஆனால் என்ன ஆனாலும் பாகிஸ்தானுக்கு மட்டும் நோ – ஜெய் ஷா வெளிப்படையான அறிவிப்பு

Jay-shah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91வது வருடாந்திர கூட்டம் அக்டோபர் 18ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவி காலம் முடிவடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக 1983 உலக கோப்பை வென்ற அணியில் இடம் வகித்த முன்னாள் நட்சத்திர வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐயின் 36வது புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருடன் துணைத்தலைவராக ராஜீவ் சுக்லா, துணை செயலாளராக தேவ்ஜித் சைக்கா, பொருளாளராக ஆஷிஷ் சீலர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இருப்பினும் செயலாளராக இருந்த ஜெய் ஷா தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கிறார்.

Roger Binny Sourav Ganguly

- Advertisement -

அந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு சௌரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்த நிலையில் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிந்து முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்த முயற்சிக்க உள்ளதாக புதிய தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்தார். அத்துடன் வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் பிட்ச்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அந்த கூட்டத்தின் முடிவில் சில முக்கியமான முடிவுகளும் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு நோ:
அதில் முக்கியமாக 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் வரலாற்றின் 16ஆவது ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்கு இந்திய அணியை அனுமதிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஒரு காலத்தில் நட்பாக அனைத்து சமயங்களிலும் விளையாடி வந்த இந்தியா எல்லைப் பிரச்சனை காரணமாக 2012க்குப்பின் சாதாரண இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் மொத்தமாக நிறுத்தி விட்டது. அதனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டும் பொதுவான இடத்தில் இவ்விரு அணிகளும் மோதி வருகின்றன.

IND vs PAK Babar Azam Rohit Sharma

அந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு கட்டத்தில் பாகிஸ்தானில் தடை பெற்றுக் கிடந்த சர்வதேசப் போட்டிகள் சமீப காலங்களில் மீண்டும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 2008க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக 2023 ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாரியம் வாங்கியிருந்தாலும் இந்திய அணி அங்கு செல்லப் போவதில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். மேலும் இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருட ஆசிய கோப்பையையும் பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தத்தை பிசிசிஐ கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி இந்த கூட்டத்திற்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் நடைபெறுவது முன்னோடியானது அல்ல என்றாலும் பாகிஸ்தானுக்கு பயணத்து அதில் நாங்கள் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம். நமது அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசு ஏற்கனவே முடிவெடுத்துள்ளது. எனவே அதை நாங்கள் பின்பற்ற உள்ளோம். மேலும் 2023 ஆசிய கோப்பையை பொருத்த வரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு அழுத்தத்தை கொடுப்போம்” என்று கூறினார்.

Women's IPL

முன்னதாக பிசிசிஐ செயலாளராக இருக்கும் அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருப்பதால் அடுத்த வருட ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறப் போவதில்லை என்பது இதிலிருந்து இப்போதே தெரிய வருகிறது. மேலும் 90களில் எப்படி ஆடவர் அணி திண்டாடியதோ அதே போல் தற்சமயத்தில் திண்டாடும் இந்திய மகளிரணி இது வரை ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவிக்கிறது.

- Advertisement -

அதனால் தற்போது ஆடவர் கிரிக்கெட் கொடிகட்டிப் பறப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மகளிர் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இதையும் படிங்க : சுயநலமா விளையாடாதீங்க ப்ளீஸ், விராட் கோலியை மீண்டும் வம்பிழுக்கும் கம்பீர் – பேசியது என்ன

அதற்கு முன்னோட்டமாக கடந்த வருடங்களில் 3 அணிகள் மட்டும் பங்கேற்ற மினி மகளிர் ஐபிஎல் நடைபெற்ற நிலையில் 2023 முதல் 5 – 6 அணிகள் பங்கேற்கும் முழுமையான மகளிர் ஐபிஎல் நடைபெறும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதனால் வரும் காலங்களில் இந்திய மகளிர் அணி சர்வதேச அரங்கில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement