ஆரம்பித்த ரோஹித் – ராகுல். பிரித்தெடுத்த பண்ட் – ஐயர் – இந்தியா இமாலய ரன்குவிப்பு

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் என்ற இமாலய ரன்குவிப்பின் மூலம் அசத்தியது.

rahul 3

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அசத்தினார்கள் என்றே கூறலாம் அதிலும் குறிப்பாக துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் சதம் அடித்து அருமையானது துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்து அசத்தியது. ஒருநாள் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தை நிறைவு செய்த ராகுல் 104 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த முதல் பந்தில் கோலி ஆட்டமிழக்க ரோஹித் ஐயருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான ரன் குவிப்பை நோக்கி சென்றது. 138 பந்துகளை சந்தித்து 159 ரன்களை குவித்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஐயர் மற்றும் பண்ட் ஆடிய விதம் இந்திய அணியை எங்கேயோ கொண்டு சென்றது. 43.3 ஓவர்களில் இந்திய அணி 292 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பின்னர் வெறும் 24 பந்துகளில் கிட்டத்தட்ட 73 ரன்களை குவித்து 47.3 ஓவர்களில் 365 ரன்கள் குவித்தது.

சிறப்பாக விளையாடிய பண்ட் 16 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 39 ரன்களுடனும், ஐயர் 32 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் என 53 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 387 ரன்கள் என்ற ரன்களை குவித்தது. கோலி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தும் இந்திய அணி பெரிய ரன்களை குவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை நோக்கி விளையாட தயாராகி வருகிறது

Advertisement