171 ரன்ஸ்.. 50 சிக்ஸ்.. கைகொடுத்த சூர்யகுமார்.. இங்கிலாந்தையும் வெளுத்த ரோஹித் சர்மா.. மாபெரும் சாதனை

IND vs ENG 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய செமி ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அப்போட்டி கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி 8 மணிக்கு துவங்கியது. இருப்பினும் மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 9 (9) ரன்னில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தையும் பின்னடையும் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த ரிஷப் பண்ட் 6 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

பொறுப்பான ரோஹித்:
இருப்பினும் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி ரோகித் சர்மாவுக்கு கை கொடுத்தார். அந்த வகையில் ஆறாவது ஓவரில் இணைந்த இந்த ஜோடி 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியது. அப்போது கேப்டன் ரோகித் சர்மா அரை சதமடித்து 6 பவுண்டரி 2 சக்சருடன் 57 (39) ரன்னில் அவுட்டானார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 4 பவுண்டரி இரண்டு சிக்ஸருடன் 47 (36) ரன்னில் அவுட்டானார். அவருடன் எதிர்ப்புறம் இணைந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாட முயற்சித்து 1 பவுண்டரி 2 சிக்சருடன் 23 (13) ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களை கடுப்பேற்றினார்.

- Advertisement -

இறுதியில் அக்சர் பட்டேல் அதிரடியாக 10 (6) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 17* (9) ரன்களும் எடுத்தாதல் 20 ஓவரில் இந்தியா போராடி 171/7 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் ஓரளவு நன்றாகவே செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இதைத்தொடர்ந்து 171 ரன்களை கட்டுப்படுத்தினால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஃபைனலில் விளையாடலாம் என்ற நிலையுடன் இந்தியா பவுலிங் செய்து வருகிறது.

இதையும் படிங்க: 3க்கு 3.. நாங்களும் இதையே எதிர்பாத்தோம்.. இங்கிலாந்தின் சவாலை ஏற்ற ரோஹித் சர்மா .. வரலாற்றை மாற்றுமா இந்தியா?

முன்னதாக இந்தப் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் அதிரடியாக விளையாடிய 2 சிக்ஸர்களை அடித்தார். இந்த 2 சிக்ஸர்களையும் சேர்த்து டி20 உலகக் கோப்பையில் அவர் 50 சிக்சர்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் தலா 33 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.

Advertisement