ரிசர்வ் டே போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இதுமட்டும் தான் ஒரே வாய்ப்பு – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இரண்டு நாட்கள் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டாலும் தற்போது இந்த போட்டி முடிவுக்கு வரவும் ஒரு சில வாய்ப்பு இருக்கின்றது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆக தற்போது நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு முதல் இன்னிங்சை முடித்துள்ளது.

WTC

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியை விட தற்போது நியூசிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியின் இரண்டு நாட்கள் மழையால் முற்றிலும் கைவிடப்பட்டதால் பெரும்பாலானோர் இந்த போட்டி டிராவிற்கு செல்லவே வாய்ப்பு உண்டு என்று நம்மில் பெரும்பாலோனோர் நினைக்கலாம்.

ஆனால் ரிசர்வ் டே ஆன ஆறாவது நாள் முழுவதும் வானிலை சரியாக இருக்கும்பட்சத்தில் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியிலும் நாளைய ரிசர்வே ஆட்டத்தின் முற்பகுதியிலும் இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் நியூசிலாந்து அணியை விரைவில் வீழ்த்தி வெற்றி பெற நமக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

gill

ஏனெனில் கடைசி நாளில் இந்திய அணி ஒரு டீசன்டான ரன் குவிப்பை வழங்கி நல்ல டார்கெட்டை செட் செய்யும் பட்சத்தில் 60 ஓவர்கள் மீதம் இருந்தால் கூட நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

shami 2

இப்படி இந்திய அணி விரைவாக ரன் குவித்து இலக்கை நிர்ணயிப்பதால் அவர்களுக்கு 4 ஆவது இன்னிங்சில் தடுமாற்றம் இருக்கும். அதுமட்டுமின்றி அதிக ஓவர்களில் நியூசிலாந்து அணியை சந்திக்க வைத்தால் இந்திய அணி வெற்றி பெற ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. ரசிகர்களாக நாம் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தால் இது மட்டும்தான் ஒரே வாய்ப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement