தீவிர வலை பயிற்சியில் வீரர்கள்.! புவனேஷ்குமாரை சீண்டிய தவான்.! சலித்து கொண்ட கோலி.!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு எதிரான 5 டெஸ்ட் , 3 நாள் போட்டி , மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க நேற்று (ஜூன் 1) இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி நாளை (ஜூன் 3) மாஞ்சிஸ்டார் மைதானத்தில் நடைபெற உள்ளது. இயர்லாந்தை வீழ்த்தியது போல பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை வீழ்த்திவிட முடியாது. அதனால் இந்திய அணி வீரர்களின் பயிற்சியில் சில சிறப்பு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

Training Net Practice
Training Net Practice

நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான கோலி, தவான், ரெய்னா உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் கோலி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் ஆலோசனை பெற்று பயிற்ச்சியில் ஈடுபட்டார். அப்போது ஒரு லெந்த் பந்தை அடிக்க முயன்றார், அது பேட்டின் நுனியில் ஈடுட்டு போல்ட் ஆகி விட்டார். பந்தை தவறவிட்ட வருத்தத்தில் கோலி சளித்துக் கொண்டுள்ளார்.

அதே போல பயிற்சயின் போது தனது கிட் நிறைய பேட்டை எடுத்து செல்லும் ரெய்னா, இரண்டு பேட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பயிற்சயில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த பயிற்சியின் போது ஷிகர் தவான், வேக பந்து வீச்சாளர் பூவேனேஷவர் குமாரை பௌன்சர் பந்துகளை வீச சொல்லி பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இந்திய பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், தவானை டென்னிஸ் பந்தில் விளையாட அறிவுரை கூறியுள்ளார் . இவ்வாறு செய்வதன் மூலம் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்ள ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.