வெ.இ, இங்கிலாந்து போன்ற அணிகள் செய்யாத உலக சாதனையை நிகழ்த்திய இந்தியா.. 3 உலக சாதனையும் சமன்

Indian T20 Wc Champions
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் ஆரம்ப முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர்ச்சியான அவமானத் தோல்விகளை உடைத்த இந்தியா ஒட்டுமொத்த ரசிகர்களையும் மக்களையும் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா படைத்துள்ள சாதனைகளைப் பற்றி பார்ப்போம். முதலாவதாக இந்த உலகக் கோப்பையில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடியது.

- Advertisement -

இந்தியாவின் சாதனைகள்:
1. அதில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் ஃபைனல் உட்பட எஞ்சிய 8 போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை (8) பெற்ற அணி என்ற தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை இந்தியா சமன் செய்தது. இதே உலகக் கோப்பையில் ஃபைனல் தவிர்த்து தென்னாப்பிரிக்காவும் 8 வெற்றிகளை பெற்றுள்ளது.

2. அத்துடன் இந்த உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் 8 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து அதிக (8) போட்டிகளில் வென்ற அணி என்ற உலக சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு தென்னாபிரிக்கா (2024) மற்றும் ஆஸ்திரேலியா (2022 – 2024) அணிகளும் தலா 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது.

- Advertisement -

3. அது போக 2 டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தின் சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது. அது மட்டுமின்றி டி20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஆசிய அணிகள் ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.

இதையும் படிங்க: கடைசி பந்து வீசும் முன்னரே கண்கலங்கிய பாண்டியா.. போட்டி முடிந்ததும் ரோஹித் கொடுத்த பரிசு – நெகிழ்ந்த ரசிகர்கள்

4. இவை அனைத்தையும் விட இந்தியா இத்தொடரில் 1 தோல்வியை கூட சந்திக்காமல் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இதன் வாயிலாக ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் வென்ற பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, போன்ற அணிகள் குறைந்தது ஒரு தோல்வியை சந்தித்து தான் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

5. மேலும் குறைந்தது இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை (1983, 2011), இரண்டு 20 ஓவர் உலகக் கோப்பை (2007, 2024), 2 சாம்பியன்ஸ் டிராபியை (2002, 2013) வென்ற முதல் அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது.

Advertisement