IND vs WI : வாழ்வா – சாவா போட்டியில் அட்டகாசம் செய்த சூரியகுமார் – இந்தியாவை தலைகுனிவிலிருந்து காப்பாற்றியது எப்படி?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் தொடங்கிய கடைசி போட்டியில் இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெயிஸ்வால் அறிமுகமாக களமிறங்கினார்.

அதை தொடர்ந்து டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கெய்ல் மேயர்ஸ் 25 (20) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜான்சன் சார்லஸை 12 (14) ரன்களில் மாயாஜால சுழலில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் தன்னுடைய கடைசி ஓவரில் அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த நிக்கோலஸ் பூரானை 20 (12) ரன்களிலும் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்துக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் பிரண்டன் கிங்கை 42 (42) ரன்களிலும் அவுட்டாகி திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

சூரியகுமாரின் அட்டகாசம்:
அந்த நிலையில் வந்த சிம்ரோன் ஹெட்மயர் 9 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் டெத் ஓவர்களில் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் ரோவ்மன் போவல் 1 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டு 40* (19) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 159/5 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 160 என்ற இந்த தொடரில் இதுவரை அடிக்காத இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஓபேத் மெக்காய் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 1 (2) ரன்னில் அவுட்டாகி அறிமுகப் போட்டியில் ஏமாற்றத்துடன் சென்றார். அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் முதல் பந்திலேயே சிக்சரை பறக்க விட்டு வேட்டையை தொடங்கிய நிலையில் எதிர்புறம் திண்டாடிய சுப்மன் கில் 6 (11) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவுக்கு இந்த தொடரில் ஆரம்பம் முதலே தனி ஒருவனாக போராடி வந்த திலக் வர்மா நிதானமாக விளையாடி கை கொடுத்தார். அதை பயன்படுத்திய சூரியகுமார் இத்தொடரில் முதல் முறையாக தம்முடைய சூப்பர்ஸ்டார் ஸ்டைல் பேட்டிங்கை வெளிப்படுத்தி சரவெடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக தமக்கே உரித்தான ஸ்டைலில் மைதானத்தின் நாலாபுறங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கி அரை சதம் கடந்து இந்தியாவை காப்பாற்றிய அவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அந்த வகையில் 5வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த நிலையில் சதமடிப்பார் என்று பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா எதிரணிக்கு வளைந்து கொடுக்காமல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (37) ரன்களும் கடைசியில் கேப்டன் பாண்டியா 20* (15) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவரிலேயே 164/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அதனால் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த தொடரில் முதல் போட்டியில் 150 ரன்களை எடுக்க முடியாமல் தோற்ற இந்தியா 2வது போட்டியில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதனால் மீண்டும் இதர வீரர்கள் தடுமாறியதால் திணறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை இத்தொடரில் முதல் முறையாக அசத்திய சூரியகுமார் யாதவ் மிகவும் எளிதாக வெற்றி பெறும் அளவுக்கு அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து காப்பாற்றினார்.

இதையும் படிங்க:IND vs WI : கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – என்ன நடந்தது?

அது மட்டுமல்லாமல் 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டி20 தொடரில் முதல் முறையாக சந்திக்கும் அவமான தோல்வியிலிருந்தும் இந்தியாவை அவர் காப்பாற்றினார். அவரது அதிரடியால் வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வை கண்ட இந்தியா வெஸ்ட் இண்டீஸ்க்கு பதிலடி கொடுத்து இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க துவங்கியுள்ளது.

Advertisement