இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள 2 அணிகளுக்கும் இடையேயுள்ள ஒரு ஒற்றுமை – ஆனாலும் இந்தியா மாஸ் தான்

IND-vs-RSA
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டியானது நாளை ஜூன் 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதனால் இந்த இறுதிப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டியில் வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த விவாதமும் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் விளையாடி வந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை குறித்த தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அதன்படி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். குறிப்பாக குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி லீக் சுற்று போட்டிகளில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளை வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத்தொடர்ந்து அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி எந்த இடத்திலும் தோல்வியை சந்திக்காமல் தற்போது இறுதிப் போட்டிக்கு இந்திய அணி வந்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று தென்னாப்பிரிக்க அணியும் குரூப் டி பிரிவில் லீக் சுற்று போட்டிகளில் இடம் பிடித்து இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது. அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தற்போது இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதையும் படிங்க : குப்பை மாதிரி பேசாதீங்க.. அது இங்கிலாந்துக்கு சாதகமா இல்லயா? மைக்கேல் வாகனை விளாசிய அஸ்வின், ஹர்பஜன்

இப்படி இரண்டு அணிகளுமே தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. இருந்தாலும் தென்னாப்பிரிக்க அணியிடம் பந்துவீச்சு சிறப்பாக இருப்பினும் பேட்டிங்கில் அவர்களது மிடில் ஆர்டர் இன்னும் கிளிக் ஆகவில்லை. ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் யூனிட் எந்த அளவிற்கு தரமாக இருக்கிறதோ அதே அளவிற்கு பந்துவீச்சிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும் கோலி ஒருவர் க்ளிக் ஆகிவிட்டால் கோப்பையை வெல்வது உறுதி.

Advertisement