கொரோனா ஒரு பக்கம் இருக்கட்டும். நாளைய போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள மற்றொரு சிக்கல் – விவரம் இதோ

Ind
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை தர்மசாலா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளும் நேற்று மாலை தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இதனை காண ரசிகர்கள் அதிக அளவு குவிந்திருந்தனர்.

Practice

- Advertisement -

தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் அச்சத்தின் காரணமாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்திய அணி வீரர்கள் ரிலாக்சாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த தொடரின் முதல் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அதனை சரிசெய்யும் விதமாக நாளைய போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக எதிரணி வீரர்களுடனும், ரசிகர்களுடனும் கை கொடுக்க மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்க அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்றைய பயிற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்மசாலாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில் கொரோனா வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளதக தெரிகிறது. இதனால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்படும் என்று மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் ரசிகர்கள் ஒன்றுகூடும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானாலும் நிச்சயம் இந்த போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் மீறி மற்றொரு சிக்கல் நாளைய போட்டியில் உள்ளது. அது யாதெனில் நாளை போட்டி நடைபெற இருக்கும் தர்மசாலா மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் மழையால் போட்டி பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

Rain-1

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டி தர்மசாலாவில் நடைபெற்றபோது மழையால் முழு போட்டியும் விளையாடாமல் ரத்தானது. எனவே இந்த முறையும் அதே போன்று நடக்குமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் மைதான நிர்வாகிகள் மழை பெய்தாலும் சரியான முறையில் மழை நீரை வடிகட்ட ஏற்பாடுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement