இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் முடிவு என்னவாக இருக்கும் – ரூல்ஸ் கூறுவது என்ன?

IND-vs-ENG
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்ற வேளையில் முதலாவது அரையிறுதி போட்டியானது நடைபெற்று முடிந்துவிட்டது.

இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று கயானா நகரில் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி நடைபெற இருக்கும் கயானா மைதானத்தில் போட்டிக்கு முன்பாக 88 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிவிப்பு அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை இந்த போட்டியில் முழுவதுமாக ரத்தானால் என்ன நடக்கும்? என்பது குறித்த தெளிவான தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது எனபதால் போட்டி மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் கூடுதலாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த கூடுதல் நேரத்திலும் மழையால் போட்டி நடைபெறாமல் போனால் சூப்பர் 8 சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதியானதாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க : 2022-ல நடந்ததுக்கு பழிதீர்க்க காத்திருக்கும் ரோஹித்தின் படை.. இந்தமுறை திருப்பி குடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு

ஒருவேளை அவ்வப்போது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நடைபெறும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு டக் வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement