என்ன ரூல்ஸ் இதெல்லாம்? விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டி – அப்படி என்ன நடந்தது?

IND-vs-ENG-Semi
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள தென்னாப்பிரிக்க அணியுடன் நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதோடு நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும் பலம் வாய்ந்த இந்திய அணியும் மோத இருக்கும் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது அரையிறுதி போட்டிக்கான விதிமுறைகள் மீது சில பாரபட்சம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

ஏனெனில் நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த போட்டிக்கு ரிசர்வ் டே வழங்கப்பட்டிருந்த வேளையில் இந்தியா இங்கிலாந்து அங்கிளு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே வழங்கப்படவிலை.

இந்த இரண்டாவது அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட 70 சதவீதம் வாய்ப்பு இருப்பது தெளிவாக தெரிந்தும் ரிசர்வ் டே வழங்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசிய கோப்பை தொடரின் போது இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்திற்கு திடீரென ரிசர்வ் டே ஐசிசி-யால் கொண்டுவரப்பட்டது.

- Advertisement -

அப்படி ஆசிய கோப்பை தொடரில் ரிசர்வ் டேவை எளிதாக கொண்டு வந்த ஐசிசி மிக முக்கியமான இந்த இந்தியா இங்கிலாந்து போட்டிக்கு ஏன் ரிசர்வ் டேவை ஒதுக்கவில்லை என்று பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இந்த போட்டி ஒருவேளை மழை பெய்து ரத்தானால் சூப்பர் 8 சுற்றில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதாலும் ஐசிசி இதுபோன்ற பாராபட்சத்தை காட்டுகிறதா? என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : அநியாயம் பண்ணிட்டீங்க.. ஆப்கானிஸ்தானின் தோல்விக்கு இது தான் காரணம்.. ஐசிசி’யை விளாசிய ஜோனதன் ட்ராட்

எது எப்படி இருப்பினும் இதுவரை இந்த இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்படாததால் மழை பெய்து போட்டி பாதிக்கப்படும் பட்சத்தில் இந்திய அணியே இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் என்று அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement