இந்தியா ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? – விவரம் இதோ

IND-vs-AUS
- Advertisement -

நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த வேளையில் அரையிறுதிக்கு செல்லப்போகும் நான்கு அணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் உறுதியாகிவிடும். அதோடு இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது குரூப் சுற்று ஆட்டங்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

தற்போது சூப்பர் 8 சுற்றிலும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 50% வாய்ப்புகள் உள்ளதாக வானிலை தகவல் வெளியாகி உள்ளதால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் போட்டிக்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக மழை பெய்யும் என்று கூறப்பட்டதால் இந்த போட்டி முடிவு எவ்வாறு அமையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மழையால் இந்த போட்டி பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பதை இந்த பதிவில் காணலாம். ஏற்கனவே இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெற்று விட்டதால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ஒரு புள்ளி இந்திய அணிக்கு கிடைக்கும். அதே போன்று ஆஸ்திரேலிய அணிக்கும் ஒரு புள்ளி கிடைக்கும்.

இதையும் படிங்க : 7க்கு 7 வெற்றி.. சோதித்த மழை.. சோக் செய்யாமல் வெஸ்ட் இண்டீஸை வெளியேறிய தெ.ஆ.. உலக சாதனை

இதனால் இந்திய அணி குரூப் 1-ல் முதல் இடத்தை பிடிக்கும். அதனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் எந்த ஒரு பாதிப்பும் இந்திய அணிக்கு இருக்காது என்று தெரிகிறது. அதே போன்று ஆப்கானிஸ்தான் அணி தங்களது கடைசி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி விட்டால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளே அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement