- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவன் இவ்வாறு தான் அமையும் – ஓர் அலசல் இதோ

ஜூன் மாத ஆரம்பத்தில் துவங்கிய நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வேளையில் முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது மட்டுமின்றி நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் சென்று அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வரும் வேளையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்த ஒரு அலசலை இங்கு பார்க்கலாம். அதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்குவது உறுதி.

மேலும் மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்டும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாவும் வழக்கம் போல் தொடர்வார்கள். அதே போன்று ஐந்தாவது இடத்தில் ஷிவம் துபே, ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியா, ஏழாவது இடத்தில் ஜடேஜா ஆகியோர் விளையாடுவதும் உறுதி. பின் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் மற்றும் விளையாடுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெறுவார்கள்.

- Advertisement -

அப்படி பார்க்கையில் நாளைய இறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் எந்த மாற்றமும் இருக்காது. மேலும் ரோஹித் சர்மா எப்போதும் நிலையான அணியை வைத்தே இந்த தொடர் முழுவதும் பயணித்துள்ளதால் நாளைய போட்டியிலும் இதே அணிதான் இருக்கும். அந்த வகையில் நாளைய இறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நானும் அதுக்காக மனமுடைஞ்சுட்டேன்.. அவர் உ.கோ ஜெயிக்க தகுதியானவர்.. விட்ராதீங்க.. வாழ்த்திய சோயப் அக்தர்

1) ரோஹித் சர்மா, 2) விராட் கோலி, 3) ரிஷப் பண்ட், 4) சூரியகுமார் யாதவ், 5) ஷிவம் துபே, 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) அர்ஷ்தீப் சிங்.

- Advertisement -