சென்னையில் நடைபெறவிருக்கும் ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு டி20 போட்டி.. எந்த அணிக்கு எதிராக தெரியுமா? விவரம் இதோ

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதற்கு அடுத்து இந்த ஆண்டு இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்க இருக்கிறது.

இதுகுறித்தான அட்டவணையையும் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு இந்த ஹோம் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி ஆகியவை நடைபெற உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேளையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கு போட்டி நடைபெற உள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் முடிந்த பிறகு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த தொடர் முடித்து இந்திய அணி ஆஸ்திரேலிய ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : இதெல்லாம் வீக்னஸ் இல்ல.. இவ்ளோ சதங்கள் அடிச்ச அவருக்கு நாம சொல்ல வேண்டியதில்ல.. கவாஸ்கர் ஆதரவு

அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மட்டும் டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்த இந்தியா இங்கிலாந்து தொடரின் முதல் டி20 போட்டியானது சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement