2024 மட்டுமல்ல அடுத்ததா 2026-லையும் நம்ம தான் டி20 வேர்ல்டு சாம்பியன் ஆகப்போறோம் – ஏன் தெரியுமா?

IND-CUP
- Advertisement -

கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற்ற ஐசிசி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்றிருந்த வேளையில் இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் தகுதி பெற்றன.

அதன்படி பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்த மாபெரும் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடரானது எங்கு நடைபெற இருக்கிறது? அந்த தொடரில் மொத்தம் எத்தனை அணிகள் பங்கேற்க இருக்கின்றன? போட்டிகள் எவ்வாறு நடைபெற இருக்கிறது? என்பது குறித்த சில தகவல்களை நாம் இங்கு பார்க்கலாம். அந்த வகையில் அடுத்ததாக இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து 2026-ல் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.

இந்த தொடரினை நடத்தும் நாடுகளாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இருக்கின்றன. ஆம் ஏற்கனவே ஐசிசி வெளியிட்ட அறிவிப்பின்படி : அடுத்த 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரினை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தும் என்று தெரிவித்துள்ளது. இப்படி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து நடத்துவது இதுவே முதல்முறை.

- Advertisement -

இதற்கு முன்பாக 2012-ஆம் ஆண்டு இலங்கை தனியாகவும், 2016-ஆம் ஆண்டு இந்தியா தனியாகவும் தங்களது சொந்த மண்ணில் உலக கோப்பையை நடத்தி இருந்தது. மேலும் அடுத்த டி20 உலக கோப்பை தொடரானது பிப்ரவரி மார்ச் மாதங்களில் ஐபிஎல் நடைபெற இருப்பதினால் அதற்கு முன்பாகவே திட்டமிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கவலைப்படாதீங்க விராட், ரோஹித் 2 ஐசிசி தொடரில் விளையாடுவாங்க.. இந்தியாவின் டார்கெட் பற்றி ஜெய் ஷா

மேலும் நடப்பு தொடரில் எவ்வாறு 20 அணிகள் பங்கேற்று நான்கு குரூப்களாக பிரிக்கப்பட்டதோ அதேபோன்று அடுத்த தொடரிலும் 20 அணிகள் பங்கேற்று நான்கு குரூப்கள் பிரிக்கப்படும். பின்னர் குரூப் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியிலும், அரையிறுதி போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற்று இறுதிப்போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement