- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பையை ஜெயிச்சதோடு மட்டுமில்லாமல் மாபெரும் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய – ரோஹித் சர்மா படை

ஜூன் மாதம் ஆரம்பத்தில் அமெரிக்காவில் துவங்கிய நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்ற இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய வேளையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் 2007-ஆம் ஆண்டு தோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதுக்கு பின்னர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மீண்டும் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணியின் கனவு நேற்றைய இந்த வெற்றியின் மூலம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இறுதிவரை விளையாடி இலக்கை நெருங்கினாலும் கடைசியில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலககோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

அதோடு மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ள தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது. அந்த வகையில் இந்த நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் எந்த ஒரு போட்டியிலுயுமே தோல்வியை சந்திக்காத இந்திய அணி தொடர்ச்சியாக 8 போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : 25 வருஷ கனவு.. எங்க எல்லாரையும் விட தகுதியான அவருக்காக தான் உலகக் கோப்பையே ஜெய்ச்சோம்.. ரோஹித் பாராட்டு

அதேவேளையில் இந்திய அணியை போன்றே லீக் சுற்றுப்போட்டிகளில் இருந்து அரையிறுதி வரை தோல்வியை சந்திக்காமல் வந்த தென்னாபிரிக்கா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தோல்வியை சந்தித்தது அந்த அணிக்கு மிகப்பெரிய வருத்தமான விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -