இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெறயிருந்த பயிற்சியை ரத்து செய்த இந்திய அணி – எதற்காக தெரியுமா?

Practice
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணி அளவில் பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய அதிகளவு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் : இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தங்களுக்காக வகுக்கப்பட்ட பயிற்சியை ரத்து செய்ததாகவும், அதே போன்று செய்தியாளர் சந்திப்பையும் தவிர்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இப்படி இந்திய அணி பயிற்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க என்ன காரணம் என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியை பயிற்சியை செய்ய ரத்து செய்ய மிக முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி நடைபெற்று முடிய திட்டமிடப்பட்ட நேரத்தை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் தாமதமானது. அதனை தொடர்ந்து கயானாவில் இருந்து விமானம் மூலம் பார்படாஸிற்கு வருவதற்கும் நேரம் பிடித்தது.

- Advertisement -

எனவே அந்த கால தாமதங்களால் வீரர்கள் மனரீதியாக சோர்வடைந்துள்ளனர். அதனால் வீரர்கள் மனரீதியாக தயாராக வேண்டும் என்பதற்காகவே பயிற்சியை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோர் அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கபில் தேவ் மாதிரி இந்தியாவுக்காக ரோஹித் ரிஸ்க் எடுக்குறாரு.. மத்தவங்களும் ஃபைனலில் இதை செய்ங்க.. ஸ்ரீகாந்த் அறிவுரை

அதேபோன்று அந்த ஆலோசனையில் இறுதிப்போட்டிக்கான யுக்தி மற்றும் தெளிவான திட்டம் ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement