- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய வீரர்கள் மட்டுமின்றி அம்பயரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட – காரணம் இதுதான்

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாள் மழை காரணமாக மொத்தமாக வாஷ் அவுட்டாக, இரண்டாவது நாளான இன்று இந்திய அணியானது முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மட்மல்லாமல் நடுவர்களும் தங்களது இடதுகையில் கருப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை எதற்காக அவர்கள் அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று குழப்பத்தில் இருக்கின்றனர் இந்திய ரசிகர்கள். அதற்கான காரணத்தை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம்.

பொதுவாக இந்திய நாட்டின் முக்கியமான நபர்கள் யாரேனும் இறந்து விட்டால், இந்திய வீரர்கள் கருப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு விளையாடுவது வழக்கம். நேற்று இந்திய நாட்டின் தடகள வீரரான மில்கா சிங், தன்னுடைய 91வயதில் கொரான தொற்றின் காரணமாக இறந்துவிட்டதால், அவருடைய மறைவை அனுசரிக்கும் விதமாக இந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் பேண்ட் அணிந்து கொண்டு விளையாடுகிறார்கள். 1929ஆம் ஆண்டு பிறந்த மில்கா சிங், அவருடைய அதிவேக ஓட்டத் திறனால் “ஃபைளையிங் சீக்” என்றும் அழைக்கப்படுகிறார்.

- Advertisement -

இந்தியாவிற்காக காமன் வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் தங்கம் வென்ற ஒரே வீரராக தற்போது வரை திகழ்கிறார் மில்கா சிங். 1958ஆம் ஆண்டு கார்டிஃப்பில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற அவர், அதே ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

1960ஆம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அவர், அந்த போட்டியில் நான்காவது இடம் பிடித்தார். அந்த ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்றிருந்தால், மூன்று முக்கிய சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய தடகள வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருப்பார்.

உலக அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்று இந்திய நாட்டை பெருமைப் படுத்திய அவருக்கு, 1959ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சர்வதேச அளவில், ஆசிய போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கங்களையும், கமன்வெல்த் போட்டிகளில் ஒரு முறை தங்கப் பதக்கத்தையும் வென்று இந்தியர்களான நம்மை பெருமைப்பட வைத்த “ஃபிளையிங் சீக்” மில்கா சிங்கிற்கு நாமும் நமது அஞ்சலியை செலுத்துவோம்.

- Advertisement -
Published by