இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – விவரம் இதோ INDvsNZ

IND-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Jemieson

- Advertisement -

அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மேலும் வேகப்பந்து வீச்சாளரான சைனி ஓரளவு தாக்குப்பிடித்து 45 ரன்கள் அடித்தார். மற்றபடி அனைவரிடமும் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்தப் போட்டிக்கு தோல்விக்கு முக்கிய காரணம் யாதெனில் டாப் 3 வீரர்கள் ரன் குவிக்க மட்டுமின்றி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.

Saini

மேலும் ராகுல் மற்றும் ஜாதவ் ஆகியோர் பின்வரிசையில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறியதால் முற்றிலும் இந்திய அணி இந்த போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது மட்டுமின்றி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி 11ஆம் தேதி மவுண்ட் மேனியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement