- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ப்ளீஸ் இறுதிப்போட்டியிலாவது ஷிவம் துபேவை தூக்கிட்டு அவரை விளையாட வையுங்க – ரசிகர்கள் கோரிக்கை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்து சில ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே எளிதாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர் என்பதனால் சமீபகாலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது வாய்ப்பினை பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது சிக்ஸ் அடிக்கும் திறமை காரணமாக அவருக்கு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவரது ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அணியின் நிர்வாகம் அவரை நம்பி தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

- Advertisement -

ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் முக்கியமான நேரத்தில் காலை வாருவது மட்டுமின்றி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். அதோடு அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதனால் அவர் அணியில் எதற்காக விளையாடுகிறார் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் தற்போதைய நிலையில் இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் இவரை எதற்காக ஆல்ரவுண்டராக கூடுதலாக அணியில் வைத்திருக்க வேண்டும்? இவர் ஒரு தேவையற்ற வீரராகவே இருந்து வருகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் ஏற்கனவே நமது அணியில் மூன்று தரமான ஆல்ரவுண்டர்கள் இருப்பதினால் ஷிவம் துபேவை நீக்கிவிட்டு நன்றாக பேட்டிங் தெரிந்த சஞ்சு சாம்சனுக்கு இறுதிப்போட்டியில் வாய்ப்பை வழங்கலாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : எத்தனையோ கதையை பாத்துருக்கோம்.. இதை யாரும் எதிர்பாக்கல.. ரிஷப் பண்ட்டுக்கு விருது வழங்கிய டிகே

அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் நன்கு பேட்டிங் தெரிந்த சஞ்சு சாம்சன் இருப்பது அணியின் பேட்டிங் பலத்தையும் அதிகரிக்கும் என்றும் சாம்சன் அவர்கள் மிடில் ஓவரில் நன்றாக நிலைத்து நின்று பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை கட்டமைக்க முடியும் என்பதனால் துபேவை தூக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -