டக் அவுட் கூட ஆகுங்க.. ஆனா இதை மட்டும் பண்ணிடாதீங்க.. ஷிவம் துபேவிடம் இருக்கும் பிரச்சனை – விவரம் இதோ

Dube
- Advertisement -

சி.எஸ்.கே அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணி தேர்வில் தனது பெயர் இடம் பெற்றதை அடுத்து இரண்டாம் பாதியில் ஃபார்ம் அவுட்டாகி சற்று மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இருப்பினும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இதுவரை எந்த ஒரு போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் துபேவின் ஆட்டம் கவலைக்குரிய விதமாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே இதுவரை பெரிய ரன்களை குவிக்காத ஷிவம் துபே இறுதி போட்டியில் எப்படி விளையாடப் போகிறார்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கும் திறமை கொண்ட ஷிவம் துபே இந்த தொடரில் அதிரடியாக ஆட முடியாமல் தவித்து வருகிறார். குறிப்பாக அதிக பந்துகளை அவர் டாட் பாலாக விளையாடுவதால் அந்தப் பிரச்சனை தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்திருக்கும் வேளையில் ஷிவம் துபே அதற்கு நேர்மாறாக இருந்து வருகிறார். குறிப்பாக இந்த தொடரில் அவர் சிக்ஸர்களை அடிப்பதைவிட அதிக டாட் பால்களை விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஒருவேளை இந்த இறுதிப் போட்டியிலும் அவர் அதிகமாக டாட் பால்களை விளையாடினால் இந்திய அணிக்கு பின்னைடைவை தரலாம். எனவே களத்திற்குள் வந்ததும் முதல் பந்திலேயே அடிக்க நினைத்து ஆட்டமிழந்தால் கூட பரவாயில்லை. அதிக டாட் பால்களை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக தெ.ஆ இந்த திட்டத்தை மட்டும் தான் யோசிக்கும்.. அதை சமாளிச்சிட்டா கப் நமக்குத்தான்

ஏனெனில் ஷிவம் துபே களமிறங்கிய பிறகு பின்வரிசையில் ஆல்ரவுண்டர்களாக பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல் போன்ற வீரர்கள் பேட்டிங் திறமையுடன் இருப்பதினால் நீங்கள் அடித்து ஆடவே முற்பட வேண்டும். அப்படி விளையாடி நீங்கள் ஆட்டம் இழந்தாலும் பின்னால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பது போன்று ரசிகர்கள் ஷிவம் துபே குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement