ப்ளீஸ் நீங்க இதை செய்ஞ்சாலே போதும்.. விராட் கோலிக்கு அன்புக்கட்டளை போடும் ரசிகர்கள் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது நேற்று செயின்ட் லூசியா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 92 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 31 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் விராட் கோலி வழக்கம் போலவே இந்த போட்டியிலும் 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் வழக்கமாக டி20 கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் இந்த டி20 உலககோப்பை தொடரில் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : கமான் பங்ளாதேஷ்.. வாயை விட்டு இந்தியாவிடம் மண்ணை கவ்வியதால் கையேந்திய மார்ஷ்.. பரிதாப பேட்டி

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் மீண்டும் தனது இயல்பான 3 ஆவது இடத்திற்கே சென்று பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் அன்பு கட்டளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement