அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணியை நினைத்து சந்தோஷத்தில் இந்திய ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

AFG-Semi
- Advertisement -

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது அந்த போட்டிகளும் நிறைவடைந்துள்ளன.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த சூப்பர் 8 சுற்று போட்டிகளின் முடிவில் குரூப் ஒன்றில் இடம்பெற்றிருந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான அணிகளும், குரூப் இரண்டில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

- Advertisement -

இந்த சூப்பர் 8 சுற்று பிரிவில் குரூப் ஒன்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் சூப்பர் 8 சுற்றில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்ததோடு வங்கதேச அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இப்படி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணியானது கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. எனவே ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறக்கூடாது என ரசிகர்கள் வேண்டி வந்தனர்.

இதையும் படிங்க : நான் 15 விக்கெட்ஸ் எடுத்ததுக்கு முழு காரணமும் அவர் தான்.. எல்லாரும் அவரை பாராட்டுங்க.. அர்ஷ்தீப் சிங் பேட்டி

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியும் வீழ்த்தி அவர்களை இந்த தொடரில் இருந்தே வெளியேற்றியதால் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறுவதற்கு காரணமான ஆப்கானிஸ்தான் அணியை நினைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வருவதோடு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வருகின்றனர்.

Advertisement