இந்திய பவுலர்கள் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த திணறுவதன் காரணம் – என்ன தெரியுமா ?

Ishanth
- Advertisement -

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஏற்கனவே இந்த மைதானத்தில் மழை பெய்த காரணத்தினால் மைதானத்தின் தன்மையை சரியாக கணித்த வில்லியம்சன் 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார்.

wtc ind

- Advertisement -

அவரின் முடிவு அந்த அணிக்கு பெரிய சாதகத்தை அளித்தது. ஏனெனில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களில் கிரான்ட்ஹோம் தவிர மற்ற அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். குறிப்பாக ஜேமிசன் 5 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளும், வாக்னர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினர். இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரஹானேவை தவிர வேறு யாராலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை இப்படி எளிதில் வீழ்த்த அவர்களுடைய வேகத்தில் இருக்கும் ஸ்விங்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. பந்தை நல்ல வேகத்துடன் வீசிய அவர்கள் பந்து நன்றாக திரும்பும் படியும் ஸ்விங் செய்து வீசினார்கள். அதனாலேயே அவர்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. ஆனால் தற்போது முதல் இன்னிங்சில் பந்து வீசி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவு வரை 49 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர்.

Jamieson 2

மேலும் 101 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து அணி தற்போது வலுவாக உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய பவுலர்களுக்கு விக்கெட் விழாமல் இருக்க என்ன காரணம் எனில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை போல இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யமுடியவில்லை என்று ஒரு புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.

Jamieson 1

அதன்படி நியூசிலாந்து வீரர்கள் ஆரம்பகட்ட 5 ஓவர்களில் பங்தினை 2.60 சதவீதம் வரை ஸ்விங் செய்து வீசினர் என்றும் இந்திய வீரர்கள் ஆரம்ப 5 ஓவர்களில் 0.6 சதவீதம் மட்டுமே பந்தை ஸ்விங் செய்த முடிந்ததாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நியூசிலாந்து வீரர்களை விட இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் ஸ்விங் குறைவாக இருப்பதன் காரணமாகவே விக்கெட்டுகள் விழவில்லை என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement