இந்தியா – தென்னாப்பிரிக்கா ஃபைனல் நடைபெறும் பார்படாஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Kensington Oval Barbados
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. கடந்த ஜூன் 1 முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் இந்த 2 அணிகளுமே இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. அதில் ஐடன் மார்க்கம் தலைமையிலான தென்னாபிரிக்கா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையின் ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

எனவே ஹென்றிச் க்ளாஸென், டீ காக், மில்லர், ரபாடா போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா முதல் வாய்ப்பிலேயே இந்தியாவை தோற்கடித்து கோப்பையை முத்தமிடும் லட்சியத்துடன் களமிறங்க உள்ளது. மறுபுறம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, அக்சர் படேல் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

- Advertisement -

பார்படாஸ் மைதானம்:
அதனால் இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை உடைத்து 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜூன் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

கடந்த 2008 முதல் இம்மைதானத்தில் இதுவரை 32 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 19 முறையும் சேசிங் செய்த அணி 11 முறையும் வென்றுள்ளன. 2 போட்டி மழையால் கைவிடப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இதுவரை 26 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 14 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா 11 வெற்றிகளையும் பெற்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மோதிய 6 போட்டிகளில் இந்தியா 4 வெற்றியும் தென்னாபிரிக்கா 2 வெற்றிகளும் பெற்றுள்ளன.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
பார்படாஸ் நகரில் ஜுன் 28ஆம் தேதி 70% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போட்டியின் முடிவு கிடைக்கும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
பார்படாஸ் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இங்கே பவுலிங் துறையில் ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஏனெனில் இங்கே ஸ்பின்னர்கள் 26.40 என்ற சராசரியில் 32 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் 20.22 என்ற சராசரியில் 59 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய அணியை விடுங்க.. தெ.ஆ அணி பைனலுக்கு செல்ல காரணமே இதுதான் – ஒப்புக்கொண்ட மார்க்ரம்

எனவே புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் அச்சுறுத்துவார்கள். அதே சமயம் மைதானத்தின் பவுண்டரி அளவு சிறியது (64, 74, 62 மீட்டர்) என்பதால் பிட்ச்சை உணர்ந்து செயல்படும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 153. வரலாற்றில் இங்கே முதலில் பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement