வார்னருடன் இருக்கும் விராட் கோலி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குழப்பத்தை ஏற்படுத்திய ஐ.சி.சி – என்ன நடந்தது?

ICC
- Advertisement -

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் நடைபெற்ற வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியானது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டு இந்த தொடரில் இருந்து வெளியேறியது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியிடம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்கள். பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலிய அணியானது இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இப்படி அரையறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது அந்த அணியின் வீரர்களுக்கும் சற்றே ஏமாற்றத்தை அளித்திருக்கும் வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து இந்த தோல்வியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு பதிவு இந்திய ரசிகர்களையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. ஏனெனில் டேவிட் வார்னர் இப்படி தோல்வியை சந்தித்து ஓய்வை அறிவித்த வேளையில் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த icc அந்த புகைப்படத்தில் இரண்டு சாம்பியன்கள் என வாக்கியத்தை பதிவிட்டுள்ளது.

- Advertisement -

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் இப்படி அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் போட்டு இரண்டு சாம்பியன்கள் என ஐசிசி பதிவிட வேண்டும்? ஐ.சி.சி-யே விராட் கோலியை ஓய்வை அறிவிக்க வற்புறுத்துகிறதா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : அரையிறுதிக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் மற்றுமொரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள ரஷீத் கான்

இதுஒருபுறம் இருக்க இந்த டி20 உலக கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறப்போகிறார் என்ற வதந்தியும் இந்த ஒரு பதிவின் மூலமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணி மாற்றத்தை சந்திக்க போகிறது என்று பேசப்பட்டு வரும் வேளையில் இப்படி ஒரு செய்தி விராட் கோலி ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement