- Advertisement -
உலக கிரிக்கெட்

தப்பிய குல்பதினின் ஆஸ்கர் நடிப்பு.. ஆனால் வசமாக சிக்கிய ரசித் கான்.. தண்டனையை அறிவித்த ஐசிசி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் லீக் சுற்றில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதே வேகத்தில் வங்கதேசத்தையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் முதல் முறையாக ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற சாதனை படைத்தது.

முன்னதாக அப்போட்டியில் 12வது ஓவரில் லேசாக மழை பெறுவது போல் தெரிந்தது. அப்போது எதையாவது செய்து போட்டியை மெதுவாக்குங்கள் என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் பெவிலியனிருந்து சைகை செய்தார். அதை முதல் ஸ்லிப் பகுதியில் பார்த்த குல்பதின் நைப் அப்படியே தொடையில் காயம் ஏற்பட்டது போல் விழுந்து நடித்தார்.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
அதை ஆப்கானிஸ்தான் அணியின் மருத்துவ குழுவினர் சோதித்து அவரை பெவிலியனுக்கு அழைத்துச் சென்றதால் சில நிமிடங்கள் போட்டி தாமதமாகி மீண்டும் நடைபெற்றது. ஆனால் போட்டியின் முடிவில் அவர் தான் வெறித்தனமாக ஓடி வந்து ஆப்கானிஸ்தானின் வெற்றியை கொண்டாட்டினார். அதனால் இவருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் போல என்று பலர் கலாய்த்தனர்.

அதே சமயம் நேர்மை தன்மைக்கு புறம்பானதாக நடந்து கொண்டதாக சிலர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். அதன் காரணமாக போலியாக காயம் ஏற்பட்டது போல் நடித்த அவருக்கு ஐசிசி தண்டனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. மாறாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கானுக்கு 2.9 விதிமுறையை மீறியதற்காக ஒரு கருப்பு புள்ளியை ஐசிசி தண்டனையாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அதாவது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 20வது ஓவரில் ஒரு பந்தை எதிர்கொண்ட ரசித் கான் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கொஞ்சம் மெதுவாக ஓடிய மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜானத் 2வது ரன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதனால் கோபமடைந்த ரசித் கான் அவர் மேல் தனது கையிலிருந்த பேட்டை தூக்கி எறிந்தார்.

இதையும் படிங்க: எங்ககிட்ட வாங்குன அடில இந்தியா மொத்தமா மாறிட்டாங்க.. ஆனா நாங்களும் இதை செய்வோம்.. எச்சரித்த பட்லர்

நல்லவேளையாக அது அவர் மேல் படவில்லை. இருப்பினும் “பேட், பந்து போன்ற உபகரணத்தை பயன்படுத்தி களத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்” என்ற 2.9 விதிமுறையை மீறியதற்காக ரசித் கானுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 24 மாதத்தில் அவர் ஐசிசி விதிமுறையை மீறுவது இதுவே முதல் முறை. எனவே 50% அபராதத்திலிருந்து தப்பிய ரசித் கான் அடுத்த 24 மாதத்தில் 4 கருப்பு புள்ளிகளை பெறும் போது தடை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -