- Advertisement -
உலக கிரிக்கெட்

அதிக பாயிண்ட்ஸ் இருந்தும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்திய அணி – காரணம் என்ன தெரியுமா ?

டெஸ்ட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் கணக்கிடும் முறையை மாற்றியிருக்கிறது ஐசிசி. குறிப்பாக சொல்லப்போனால் அட்டவணையை மாற்றியிருக்கிறது ஐசிசி இதன் காரணமாக இந்திய அணி தனது முதல் இடத்தை இழந்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இதன் இறுதிப் போட்டி நடைபெறும். இந்த ஆறுமாத காலம் பல்வேறு டெஸ்ட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு முடிவுகளை எடுக்கும் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை மாற்றி விட்டு அதற்குப் பதிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை அந்த இடத்தில் வைத்து இருக்கிறது. மேலும், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் அணிதான் முதலிடத்தை பிடிக்கும் என்றும் அறிவித்து இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு டெஸ்ட் தொடர் நடைபெறாமல் இருந்த போதும், புதன்கிழமை வரை முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 360 புள்ளிகள் எடுத்து இருக்கிறது.

ஆனால் இதன் வெற்றியின் சதவீதம் 75. ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகள்தான் எடுத்திருக்கிறது ஆனால் இதன் வெற்றியின் சதவீதம் 82.2. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வரிசையாக வருகின்றன.

ஐசிசி எடுத்திருக்கும் இந்த முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் திடீரென இந்திய அணி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது என்பதை அறிந்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

- Advertisement -
Published by