பால் டேம்பரிங் செய்தால் இதுதான் கதி..! தில்லு முள்ளு செய்யும் வீரர்களுக்கு சாட்டையைச் சுழற்றும் ஐசிசி..! அதிர்ச்சியில் வீரர்கள்..!

Smith

`பால் டேம்பரிங்’ புகாரில் சிக்கும் வீரர்களுக்கான தண்டனையை அதிகரிக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.’பால் டேம்பரிங்’ (ball-tampering) இந்த வார்த்தைதான், இந்த வருடம் கிரிக்கெட் உலகை வட்டமடித்த பெரும் பிரச்னை. கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட்.
CameronBancroft
இதை அம்பயர்கள் கண்டுபிடிக்க, விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து நடந்த விசாரணையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கும் இதில் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்தச் செயலைச் செய்த பான் கிராஃப்ட்டுக்கு 9 மாதமும், வார்னர், ஸ்மித் இருவருக்கும் ஒரு வருடமும் தடை தண்டனையாகக் கிடைத்தது. அதேபோல, ஆஸி பயிற்சியாளர் டேரன் லேமன் ராஜினாமாசெய்தார். இது நடந்து சரியாக 3 மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் பால் டேம்பரிங் செய்து சிக்கினார்.

அவருக்கு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துவருவதை அடுத்து இதைக் கட்டுப்படுத்த ஐசிசி ஆலோசித்துவந்தது. அதனடிப்படையில், பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டுவந்த அபராதம், ஒரு சில போட்டிகள் தடை போன்றவற்றை மாற்றி, கடுமையான தண்டனையை கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது.
warnersmith
அந்த வகையில் இனி, பால் டேம்பரிங் செய்பவர்களுக்கு 6 டெஸ்ட் போட்டிகளோ அல்லது 12 ஒரு நாள் போட்டிகளிலோ விளையாட தடை விதிக்கவும், இதேபோல தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வீரர்களுக்கு, அதற்கு என்று தனியாக கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை முறையீட்டில் சாதகமாக தீர்ப்பு வந்தால், கட்டணத் தொகை திரும்ப வழங்கவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு, தற்போது ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.