வீரர்களுக்கு அடி மேல் அடி ..! ஐசிசி யை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பு..! – சிக்கலில் வீரர்கள்..! – காரணம் இதுதான்..!

- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஒழுக்கத்தை சீர் செய்யும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் என்று அழைக்கபடும் ஐ சி சி புதிய விதிமுறைகளை விதிதுள்ளது. சமீபத்தில் டப்லினில் நடைபெற்ற ஐ சி சி நிர்வாகத்தின் வருடாந்திர கூட்டத்தில் , இந்திய முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் அணில் கும்பலே தலைமையிலான குழு இந்த புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
ball
கிரிக்கெட் போட்டிகளில் நடந்து வரும் ஏமாற்று வேலைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு அணியின் கிரிக்கெட் நிர்வாகங்கள் ஏகப்பட்ட கட்டுப்பாட்டைவைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மைதானத்தில் விலையிடும் வீரர்கள் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, அதனை மீறும் பட்சத்தில் அவ்ரக்ளுக்கு தண்டனைகளையும் வழங்கபடுகிறது.

கடந்த மார்ச் மாதம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் மூன்று வீரர்களுக்கு ஓரிரண்டு கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே போல சமீபத்தில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமலும் சமீபத்தில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அபராதமும் பெற்றார்.

- Advertisement -

சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்களை திட்டுவது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறான குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐசிசியின் பரிந்துரைபடி அனில் கும்ப்ளே தலைமையினான ஒரு குழுவை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைபடி கிரிக்கெட் போட்டிகளில் சில புதிய விதி முறைகளை அறிவித்துள்ளது.அதில்,
ball
* ஆபாசமாகத் திட்டுவதும் , நடுவர் முடிவை அவமதிப்பதும் முதல் நிலை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* எதிரணி வீரரை திட்டுவது, பந்தை சேதப்படுத்துதல், தனிப்பட்ட முறையில் சீண்டுவது போன்ற செயல்கள் 2
ஆம் மற்றும் 3ஆம் நிலைக் குற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது.

* பந்தை சேதப்படுத்ததால் 2 ஆம் நிலை குற்றமாக இருந்தது, தற்போது அது 3 ஆம் நிலை குற்றமாக
மாற்றப்பட்டுள்ளது. அப்படி பந்தை சேதப்படுத்தினால் 6 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட
தடை விதிக்கப்படும்.

* அதே போல வீரர்கள் அப்பீல் செய்யும் போது அது தவறாக இருக்கும் பட்சத்தில் அதற்கு
அபராத தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement