இனிமே டைம் மிச்சம். டி20 போட்டியை சீக்கிரமா முடிக்க புதிய ரூல்ஸ் போட்ட ஐ.சி.சி – அசரவைக்கும் அடுத்த விதி

Umpire
- Advertisement -

வழக்கமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு சில அணிகள் தங்கள் பந்துவீச்சை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் பார்வையாளர்கள் வெறுப்பும் ஆவார்கள் மேலும் ஆட்டத்தின் நேரமும் அதிகரிக்கும். இதற்காக களத்தில் உள்ள நடுவர்கள் அவர்களுக்கு அபராதம் விதிப்பது ஒரு சாதாரண நடைமுறைதான்.

Roy

- Advertisement -

மேலும் கேப்டனுக்கு போட்டிகளில் விளையாட தடை மற்றும் தகுதி இழப்பு புள்ளிகள் கொடுத்தாலும் இந்த விடயம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் வருகிறது. இந்நிலையில் இந்த விடயத்தில் மாற்றத்தை கொண்டு வர ஐசிசி வேறு ஒரு புதிய விதி அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து ஐசிசியின் மேலாளர் கூறியதாவது : டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை கொண்டு வரப்போகிறோம்.

அதாவது டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸ் துவங்கும் பொழுது 85 நிமிடங்கள் என்று கடிகாரத்தில் செட் செய்யப்படும். அந்த 85 நிமிடங்கள் குறைந்த ஜீரோவில் வந்து நிற்கும் பொழுது பந்து வீசும் அணி கடைசி ஓவரை வீச ஆரம்பித்திருக்க வேண்டும் இதன் நோக்கம் என்னவென்றால் பார்வையாளர்கள், நடுவர்கள் மற்றும் வீரர்கள் என அனைவருக்கும் நேரம் குறித்த சரியான தகவல் தெரிய வேண்டும். மேலும் நேரம் விரயம் ஆகும்போது அவர்களுக்கு அது ஞாபகம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

Rain

இதனால் தேவையில்லாமல் வீரர்கள் மற்றும் கேப்டன்கள் இணைந்து பேசுவது, பீல்டிங் செட் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்வது மற்றும் பந்து வீச்சாளரை மாற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வது போன்றவை தவிர்க்கப்படும். அதேபோல டி.ஆர்.எஸ், வீரர்களின் காயம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவை ஏற்படும்போது அந்த கடிகாரம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த விதியினை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

Advertisement